Saturday, November 16, 2013

மாணவர்களும் கல்வி நிலையும்.

குழந்தைகளுக்கு ABL மற்றும் SABL முறைகளோடு இணைந்த கற்பித்தல் முறை மேற்கொள்ளப்படுகிறது.

இப்பள்ளியின் குழந்தைகளுக்கு கற்றலில் ஆர்வமானது அலாதியானது.

ஒரு நொடியை கூட வீணாக்க கூடாது என்பதில் மாணவர்களும் ஆசிரியர்களும் நன்கு உணர்ந்தவர்களாக உள்ளனர்.

கல்வி அதிகாரிகள் இப்பள்ளியின் கற்றல் திறனையும் கற்றல் ஆர்வத்தினையும் வியந்து பாராட்டி செல்வதுண்டு.

படித்தல் - எழுதுதல் - கணக்கீடுகளை செய்தல் எனும் முக்கிய திறன்களை மாணவர்களுக்கு வளர்ப்பதில் செயல்பாடுகள் முழு வீச்சில் அமைந்துள்ளன.


மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் தனது 23 ஆண்டு அனுபவத்தில் இருந்து முறையான மற்றும் முழுமையான கற்றல் - கற்பித்தல் பணியினை ஆற்றி வருகிறார்.

தலைமை ஆசிரியர் 3,4,5 ஆகிய மூன்று வகுப்புகளை கவனித்துக் கொள்கிறார்.


உதவி ஆசியர் 1 மற்றும் 2 ஆகிய வகுப்புகளை கவனித்து வருகிறார்.

இப்பள்ளியில் சில குறிப்பிடத்தக்க மீத்திறன் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான தனி கற்றல் முறைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன.


இப்பள்ளியானது கடந்த மாதம் நடந்த சதுரங்க போட்டியில் ஒன்றிய அளவில் முதல் இரண்டு இடங்களை பெற்று தம் பள்ளியின் திறனை ஒன்றிய அளவில் காட்டி வந்தது.



மாவட்ட அளவில் இறுதி சுற்று வரை எங்கள் பள்ளி மாணவர்கள் சதுரங்க போட்டியில் போராடி ஆறுதல் பரிசை தட்டி வந்தனர்.

மாணவர்களுக்கு கல்வியோடு கலைதிறன் ஆர்வமும் தூண்டப்படுகிறது.



மாணவர்களுக்கு களப்பயண ஏற்பாடுகளும் அவ்வப்போது செய்யப்படுகின்றன.


ஆசிரியர்கள் விவரம்

 இப்பள்ளியானது ஈராசியர் பள்ளியாகும்..


இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் 

திரு. R. பரசுராமன் , M.A.M.Ed., D.T.Ed., அவர்கள்  இவர் கடந்த 25-07-2007 முதல் இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் சேத்துப்பட்டு ஒன்றிய தமிழ்நாடு துவக்கப்பள்ளி கூட்டணியின் செயலாளராகவும் உள்ளார்.


செல் - 948739488


உதவி ஆசிரியர் 

திரு. R. ஜெகநாதன் , B.Sc., B.Ed., D.T.Ed., அவர்கள்   இவர் கடந்த 17-12-2012 அன்று முதல் இப்பள்ளியின் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

செல் - 9894016112







மாணவ மாணவிகளின் விவரம்

வகுப்பு வாரியாக

முதல் வகுப்பு   3+4 = 7
இரண்டாம் வகுப்பு 8+4=12
மூன்றாம் வகுப்பு 3+2 = 5
நான்காம் வகுப்பு 4+4 = 8
 ஐந்தாம் வகுப்பு 4+1 = 5

மொத்த மாணவர்கள் = 22
மொத்த மாணவிகள் = 16

பள்ளியின் மொத்த மாண மாணவிகளின் எண்ணிக்கை 38


கடந்த ஐந்தாண்டுகளாக பள்ளியின் மாணவர் சேர்க்கை சீராக உயர்ந்து வருவதை காண முடிகிறது.

இதற்கான காரணமாக தமிழக அரசின் சிறப்பன திட்டங்களோடு . எங்கள் பள்ளி ஆசிரியர்களின் சீரிய பணியும் கருத்தில் கொள்ளத்தக்கது.

Friday, November 15, 2013

பிற கட்டிடங்களும் - வசதிகளும்

 குடிநீர் வசதி :

மாணவர்களுக்கு தனியான குடிநீர் வசதியானது இல்லை.

எனினும் கிராமபுற சூழலில் குழாய் தண்ணீர் எனப்படும் பழுப்பு மூலமான குடிநீரையே மக்களும் மாணவர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்காக குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட ஓர் சிமண்டால் ஆன பழைய குடிநீர் தொட்டியே இதுநாள் வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் பள்ளிக்கென தனியாக ஆழ்துளை குழாய் (போர்) மூலமாக தனியாக மேல்நிலை நீர்தேக்க தொட்டி வைக்ப்பட்டு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

 கழிவரை வசதிகள்

பள்ளி வகுப்பறை கட்டிடத்தின் பின் புறமாகவே ஒரு கழிவறை கட்டிடமானது மாணவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ளது.

மதிய உணவு தயாரிக்கும் கட்டிடம்

மதிய உணவு தயாரிக்க இது நாள் வரை வனத்துறை மானியத்தில் கட்டப்பட்ட சிறிய அளவிலான கட்டிடமானது இரண்டு மாதங்களுக்கு முன்னர் புதிய கட்டிடமாக 1.5 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது.

சுற்றுச்சுவர்

பள்ளி கட்டிடத்தினை சுற்றிலும் முழுமையான சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கான மீதமுள்ள இடங்கள்:

பள்ளி வகுப்பறை கட்டிடத்தின் பின் புறம் சுமார் 50 ச.மீ பரப்பிற்கு ஓர் காலி இடம் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் உள்ளது.

பள்ளிக்கு அருகில் உள்ள பயன்படுத்தாத கட்டிடங்கள்.

10 ச.மீ பரப்பளவில் கிராம மக்களுக்கென உண்டாக்கப்பட்ட ஓர் தொலைக்காட்சி பெட்டி கட்டிடம் . நல்ல நிலையில் பயன்படுத்தப்படாத சூழலில் உள்ளது. இது வன இலாக்காவின் சார்பாக கட்டப்பட்ட கட்டிடமாகும்.


மின்னணு சாதனங்கள் விவரம்

இப்பள்ளியில் மின் வசதியானது அமைந்துள்ளது.

மேலும் 3 குழல் மின் விளக்குகள் 2 மின் விசிறிகள்  ஆகியனவும் அமைந்துள்ளது.

வண்ணத் தொலைக்காட்சிகள்  SSA மூலம் கொடுக்கப்பட்டது.

பெரியது 1 , சிறியது 2 

DVD player - 1

Radio with old Tape Recorder - 1






பள்ளி கட்டிடமும் - வகுப்பறை சூழலும்

பள்ளிக்குரிய மொத்த இடத்தின் பரப்பளவு - 454 ச.மீ.

இதில் 64 ச.மீ பரப்பளவில் வகுப்பறைகளானது அமைந்துள்ளது.

வகுப்பறையானது 1 முதல் 5 வகுப்புகளுக்கும் ஒரே கட்டிடத்தில் அமைந்துள்ளது.





இடையில் தட்டி எனப்படும் . மூங்கிலால் ஆன தடுப்பு ஒன்று வைக்கப்பட்டு ஒரு புறம் 1 மற்றும் 2 வகுப்புகளுக்கும்.


மற்றொருபுறம் 3 முதல் 5 வகுப்புகளுக்கும் பாடம் நடத்தப்படுகிறது.


பள்ளி வகுப்பறையின் மொத்த பரப்பளவு 64 ச.மீ என்பதால் ஒரு ச.மீ பரப்பிற்கு ஒரு மாணவர் என்ற வீதத்தில் மொத்தம் 64 மாணவர்கள் அமர்ந்து படிக்க ஏதுவான ஓர் இடமாக இப்பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு இடம் 64 ச.மீ பரப்பில் பள்ளிக்கு முன்புறமாக அமைந்துள்ளது.


முகவுரை.

புதுக்கரிக்காத்தூர் துவக்கப்பள்ளியானது .

இந்தியாவின் தென் மாநிலமான தமிழகத்தில்

திருவண்ணாமலை மாவட்டம்

போளூர் வட்டம்

சேத்துபட்டு ஊராட்சி ஒன்றியம்

கரிகாத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ளது

புதுக்கரிக்காத்தூர் துவக்கப்பள்ளி ஆகும்.


இது 12-03-2001 அன்று புதிதாக துவங்கப்பட்ட துவக்கப்பள்ளி.


இந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகை - (ஆண்கள் 209+ பெண்கள் 223 = மொத்தம் 432)

இதன் அமைவிடம் google map ல்... 12.543505, 79.187069

இந்த பள்ளியானது போளூரில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இதன் அருகில் கரிகாத்தூர் எனும் சற்று பெரிய கிராமம் அமைந்துள்ளது.

கரிக்காத்தூரில் இருந்து இது ஒரு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

மேலும் கரிக்காத்தூர் வரை மட்டுமே மினி பேருந்துகள் எனப்படும் கிராம பேருந்துகள் வந்து செல்லும்.


இக்கிராம மக்களின் முயற்சியால் இக்கிராமத்திற்கென தனியாக இப்பள்ளியானது 2001 ஆம் ஆண்டு புதிதாக துவங்கப்பட்டது.