Sunday, July 13, 2014

முழுமதி அறக்கட்டளையின் - பள்ளி புதுப்பிப்பு பணிகள் துவக்க விழா.

கடந்த ஓராண்டுகளாக முழுமதி நிர்வாகமும் , புதுக்கரிக்காத்தூர் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் , ஆசிரியர் , கிராம பொதுமக்கள் ஆகியோர் ஆவலோடு எதிர்பார்த்திருந்த தருணம்..

முழுமதி அறக்கட்டளையின் பள்ளி சீரமைப்பு உதவிகள் துவக்க விழா.

நாள் : 15-07-2014
இடம் :திருவண்ணாமலை மாவட்டம் - போளூர் வட்டம் - சேத்துப்பட்டு ஒன்றியம் - புதுக்கரிக்காத்தூர் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி.

இவ்விழாவிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

சுமார் ஓராண்டுகளுக்கு முன்பு முகநூல் மூலமாக எனக்கு நட்பானவர் அண்ணன் Ganesh Ezhumalai அவர்கள் . அவர் உலகலாவிய வலை மூலம் எனக்கு அறிமுகம் ஆனாலும் அவரின் சொந்த ஊர் எங்கள் ஊரில் இருந்து சுமார் 3 கி. மீ தொலைவில் உள்ள மாம்பட்டு கிராமமே. தற்போது ஜப்பானில் NIMS பல்கலைகழகத்தில் இளம் அறிவியல் ஆராய்ச்சியாளராக பயிற்சி பெற்று படித்துவருகிறார்.

இவர் முழுமதி அறக்கட்டளை (Muzhumathi Trust) நிர்வாக உறுப்பினராகவும் இருந்துவருகிறார். இவரும் இவரின் நண்பராக அண்ணன் Arul Ramalingam மற்றும் அண்ணன் Pari Velmuruganஅவர்களும் என்னை தொடர்பு கொண்டு முழுமதி அறக்கட்டளை பற்றிய உதவிகளை சொன்னார்கள். மேலும்,https://www.facebook.com/franklinmtp?fref=ts திரு. பிராங்ளின் அவர்களின் ராமபாளையம் பள்ளியை பற்றியும் கூறி ”தங்களின் பள்ளி மேம்பாட்டிற்கான உதவிகளை முழுமதி அறக்கட்டளை மூலமாக செய்துதர உள்ளோம்” என்று கூறினார்கள்.

மிக்க மகிழ்ச்சியான சூழலில் நான் என் தலைமை ஆசிரியரை அணுகிய போது அவரும் முழு ஒத்துழைப்பினையும் கிராம கல்விக் குழு மற்றும் பள்ளி மேலாண்மை குழுக்களின் வாயிலாக அளிப்பதாக சொல்லியிருந்தார். முழுமதி நிர்வாகத்தினரும் இப்பள்ளியை தேர்ந்தெடுக்க முன்வந்து பள்ளியை இரண்டு முறை நேராக வந்து பார்வையிட்டு தேவைகளை கேட்டறிந்து சென்றனர்.

இவற்றின் காரணமாக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் , விளையாட்டு பொருட்கள் (விளையாட்டு மைதானம்) , மாணவர்கள் அமர வட்ட மேசைகள் , பள்ளிக்கு வண்ணம் பூசுதல் .. போன்றவற்றை முழுமதி அறக்கட்டளை சார்பாக செய்துதர உள்ளார்கள். அதற்கு முதற்படியாக சுமார் 18 ஆயிரம் செலவில் பள்ளி முழுமைக்கும் வண்ண பெயிண்ட் பூசும் பணிகள் தலைமை ஆசிரியர் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.

அதற்கும் மேலாக போளூரில் இருக்கும் படித்த இளைஞர்களை கொண்டு (கலை , அறிவியலில் புலமை பெற்றோர்) பள்ளி மாணவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பல்வேறு வகையில் - பல்லூடக வாயிலாக - மாணாக்கர் அறிவினை பெருக்கும் ஒரு திட்டமும் இப்பள்ளியில் செயல்படுத்தப்பட உள்ளது.

இப்பள்ளியின் வளர்ச்சியில் நானும் ஒரு காரணமாக இருக்கிறேன். ஆனால் தற்போது இப்பள்ளியில் நான் இல்லை என்பதே சற்று வருத்தமாக உள்ளது.. (ஆனாலும் நானும் இம்மாணாக்கரின் அறிவு வளர்ச்சியில் காரணமாய் இனி இருப்பேன் என்பதில் பெருமிதமே) காரணம் தற்போது எனது சொந்த ஒன்றியத்திற்கு பணி மாறுதல் பெற்றுள்ளேன் என்பதால். ஆனால் எனக்கு பதிலாக என் நண்பர் Voorhees Shiva அங்கு தற்போது பணியில் உள்ளார்.

"நல்லதே நினைத்தால் ... நல்லதே நடக்கும் என்பது போல...” என் பள்ளி மாணவர்களுக்கான உதவிகள் தானாகவே முழுமதி அறக்கட்டளை மூலமாக வந்து சேர்ந்துவிட்டன. ஓராண்டுகால ஆயத்த பணிகளை முழுமதி நிர்வாகம் செய்து தற்போது துவக்க விழாவினை வரும் 15-07-2014 செவ்வாய்கிழமை நடத்த உள்ளது.


இந்த வேளையில் நான் ...

முழுமதி அறக்கட்டளை நிர்வாகிகள்

திரு. கணேஷ் ஏழுமலை
திரு. அருள் ராமலிங்கம்
திரு. பாரி வேல்முருகன்
திரு. செந்தில் கணபதி

உடன் முழுமதி அறக்கட்டளை (Muzhumathi Trust) நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் கிராம பொதுமக்கள் ... மாணவர்கள்... தலைமை ஆசிரியர் ... ஆகிறோர் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.



பள்ளியின் வண்ண பூச்சு படங்கள்...






















No comments:

Post a Comment